பக்கம் எண் :

சிறுவர் உலகம்

சாய்ந்தாடுதல்

சாய்ந்தா

டம்மா சாய்ந்தாடு

சாயக்

கிளியே சாய்ந்தாடு

அன்னக்

கிளியே சாய்ந்தாடு

ஆவாரம்

பூவே சாய்ந்தாடு

குத்து

விளக்கே சாய்ந்தாடு

கோயில்

புறாவே சாய்ந்தாடு

மயிலே

குயிலே சாய்ந்தாடு

மாடப்

புறாவே சாய்ந்தாடு.

______

கை வீசுதல்

கைவீ

சம்மா கைவீசு

கடைக்குப்

போகலாம் கைவீசு

மிட்டாய்

வாங்கலாம் கைவீசு

மெதுவாய்த்

தின்னலாம் கைவீசு

சொக்காய்

வாங்கலாம் கைவீசு

சொகுசாய்ப்

போடலாம் கைவீசு.

_______

 தோள் வீசுதல்

     தோள்வீ சம்மா தோள்வீசு
சுந்தரக் கிளியே தோள்வீசு

பச்சைக்

கிளியே தோள்வீசு
     பவளக் கொடியே தோள்வீசு

திண்ணையின்

கீழே தவழ்ந்து விளையாடும்

தேனே

மணியே தோள்வீசு.

_________