பக்கம் எண் :

2

சிறுவர் உலகம்

265

2.

இள இரிச்சிக்கோ
பூவைப் பறிச்சிக்கோ
பொட்டியிலே வச்சுக்கோ.
 

3.

முக்கோடு தக்கோடு பாகற்காய்
முள்ளில் லாத ஏலக்காய்.
 

4.

நான்கே நடந்து வரப
பாம்பே படர்ந்து வர.
 

5.

அஞ்சு களாக்காய் தும்பைப்பூ
அதிலே ஒரு ஜன்னல்.
 

6.

ஆக்கூர் அடிவாழை
அண்ணன் தம்பி பெருவாழை.
 

7.

ஏழு என்னும் காட்டிலே
எங்கள் அண்ணன் வீட்டிலே
மஞ்சள் சரட்டிலே.
 

5

1.

காண்டேனி கூண்டு - மத்தேனி மதுரம்
ஒண்ணேனி உலகம்.
 

2.

ரெண்டேனி ரிஷபம்.

3.

மூணு முத்தாச்சம் முத்தாச்சம்
பேர்வழி செங்கல் பதிவிரத்தம்
பென்னாரே போட்டி ரத்தப்பட்டுடுத்தி
ரெத்தம்போல் பாவாடை சாத்திரத்தம்.
 

4.

நாலாங் கொல்லையிலே
நாறப் பழம்பழுக்க
நாங்களெல்லாம் வாங்கித்தின்ன
நடுக்கு ஜூரமடிக்க - எங்கம்மா எனைவைய.
 

5.

அஞ்சும் பஞ்சாங்கம்.

6.

ஆறோ பாலாறு.

7.

ஏழோ விளக்கெரிய.

8.

எட்டும் கொட்டாரம்.

9.

உத்தர மல்லாறு.