பக்கம் எண் :

என

சிறுவர் உலகம்

267

என்ன பனை? தாளிப்பனை.
    என்ன தாளி? விருந்தாளி.
    என்ன விருந்து? மணவிருந்து.
    என்ன மணம்? பூமணம்.
    என்ன பூ? மாம்பூ.
    என்ன மா? அம்மா.

3

உன்பேர் என்ன? -    பேரிக்காய்
    உன்ஊர் என்ன? -    ஊறுகாய்
    உன்ஜாதி என்ன? -    ஜாதிக்காய்.

4

ஆண்டி ஆண்டி
    என்ன ஆண்டி? - பொன்னாண்டி.
    என்ன பொன்? - காக்காய்ப்பொன்.
    என்ன காக்காய்? - அண்டங்காக்காய்.
    என்ன அண்டம்? - பூஅண்டம்.
    என்ன பூ? - பனம்பூ.
    என்ன பனை? - தாளிப்பனை.
    என்ன தாளி? - நாகதாளி.
    என்ன நாகம்? - சுத்தநாகம்.
    என்ன சுத்தம்? - வீட்டுச்சுத்தம்.
    என்ன வீடு? - ஓட்டுவீடு.
    என்ன ஓடு? - பாலோடு.
    என்ன பால்? - நாய்ப்பால்.
    என்ன நாய்? - வேட்டைநாய்.
    என்ன வேட்டை? - பன்றிவேட்டை.
    என்ன பன்றி? - ஊர்ப்பன்றி.
    என்ன ஊர்? - கீரைஊர்.
    என்ன கீரை? - அறைக்கீரை.
    என்ன அறை? - பள்ளியறை.
    என்ன பள்ளி? - மடப்பள்ளி.
    என்ன மடம்? - ஆண்டிமடம்.
    என்ன ஆண்டி? - பொன்னாண்டி!