க
கீரை கீரை
என்ன கீரை? - அறைக்கீரை
என்ன அறை? - பொன்
அறை.
என்ன பொன்? -
காக்காய்ப்பொன்
என்ன காக்காய்? -
அண்டங்காக்காய்.
என்ன அண்டம்? - பிரம்மாண்டம்.
என்ன பிரம்மா? -
சதுர்முகப்பிரம்மா.
என்ன சதுர்? -
மாஞ்சதுர்.
என்ன மா? - நெல்லுமா.
என்ன நெல்? - சம்பாநெல்.
என்ன சம்பா? - முத்துச்சம்பா.
என்ன முத்து? - கொட்டைமுத்து.
என்ன கொட்டை? - முந்திரிக்கொட்டை.
________
நிலாப்பாட்டு
1
நிலாநிலா வாவா
நில்லாமே ஓடிவா
மலைமேலே ஏறிவா
மல்லிகைப்பூக் கொண்டுவா!
2
எட்டிஎட்டிப்
பார்க்கும்
வட்டவட்ட நிலாவே
துள்ளித்துள்ளிச்
சிரிக்கும்
தும்பைப்பூவு நிலாவே.
3
நிலாநிலா எங்கேபோறாய்?
மண்எடுக்கப் போறேன்.
மண் என்னத்துக்கு?
சட்டிபானை செய்ய
சட்டிபானை என்னத்துக்கு?
சோறாக்கித் தின்ன.
|