பக்கம் எண் :

4

சிறுவர் உலகம்

269

4

நிலாநிலா எங்கெங்கேபோனாய்?
    களிமண்ணுக்குப் போனேன்.

    களிமண் என்னத்துக்கு? வீடுகட்ட.
    வீடு என்னத்துக்கு? மாடுகட்ட.

    மாடு என்னத்துக்கு? சாணிபோட
    சாணி என்னத்துக்கு? வீடு மெழுக

    வீடு என்னத்துக்கு? பிள்ளைபெற
    பிள்ளை என்னத்துக்கு?

    எண்ணெய்க்குடத்திலே போட்டுப்பிள்ளை
    துள்ளித்துள்ளி விளையாட.

__________

வேடிக்கைப் பாட்டுக்கள்

கத்தரிக்காய் திருடப்போனேன்
        கடைத் தெருவிலே - அந்தக்
    கடைக்காரன் கண்டுக்கிட்டுப்
        போட்டான் முதுகிலே.
    ஒட்டுப்பீடி பொறுக்கப்போனேன்
        பஜார் ரோட்டிலே - அங்கே     
    பற்றவைக்க நெருப்புக்கேட்டேன்
        பாட்டி வீட்டிலே.

1

*       *       *

மணிஅடிக்குது மணிஅடிக்குது
        மதுரைக்கோட்டையிலே
    ரங்கநாதன் பேர்விளங்குது
        ஆட்டுக் கொட்டகையிலே.

2

*       *       *