பக்கம் எண் :

274

மலையருவி

ஒருகுரங்கு மலையிலே
    தொங்கினதாம் குருவி
    நான்நல்லஒரு வீட்டைக்கட்டி
    மினுக்கட்டான்பூச்சி விளக்குவச்சேன்.
    

27
            * *       *

ஏச்சுப் புட்டேன்
        கீச்சுப் புட்டேன்
        ஏழுபணம் வாங்கிப்புட்டேன்.

28
            * *       *

பூபூ புளியம்பூ
        பொட்டியிலே வச்சால் தாழம்பூ
        ஈச்சி எலுமிச்சி
        பலிகொடுத்தாள் பல்லிச்சி.

29
            * *       *

வெள்ளிப் பிரம்பெடுத்து
        விளையாடப் போனேன்
        தங்கப் பிரம்பெடுத்துத்
        தாலிகட்டப் போனேன்.

30
            * *       *

சிமிச் சிமிச்சாம் மொச்சைக் கொட்டையாம்
    சும்மா இருக்கிற வள்ளிக் கிழங்காம்
    கார வடை பூந்தி லட்டு
    ராம் ராம் ராம்
    ஆடினேன் - உன்னைப் - பாடினேன்.
    சந்திரரே சூரியரே சாதிப் பிராமணரே
    இந்திரரை நோக்கியல்லோ
    ராம் ராம் ராம்
    ஆடினேன் - உன்னைப் - பாடினேன்.

31
            * *       *

அண்ணன் பெண்ணே ராமக்கா
        அரிசிக் காரன் வந்திட்டான்
        சின்ன வீட்டிலே புகுந்துக்கோ
        சிலுக்குத் தாளம் போட்டுக்கோ
        புட்டைப் பிச்சுத் தின்னுக்கோ
        புருசன் கூடப் பேசிக்கோ!

32

_________