பச
பச்சைத் தவலை
பளபளெங்கப்
பழனி மச்சான் மினுமினுங்க
வாழைத் தண்டை ரெண்டாவெட்டி
வளைய மறையப் பெண்ணாவச்சு
சின்னத் தம்பிக்குத்
தாலிகட்டி
ஆலாத்திக் கிண்ணம்
போயி
ஆற்றிலே கிணுக்கட்டி
ராட்டினமே ரதக்கிளியே
சுண்ணாம்பே சூரியனே.
21
*
* *
ஆபத்துக்கு ஏற்றாப்போலே
கரப்பி தந்தாங்க
அவுங்களுக்கு ஏற்றாப்போலே
இவுங்க வந்தாங்க
ராசாஉள்ளதை நான்
சொல்ல வந்தேனே.
22
*
* *
உடும்பு தடும்பு
தத்திலி புத்திலி
மக்கான்
சுக்கான்
பால் பறங்கி
லடும் லுடும்
ஜீ ஜல்!
23
*
* *
ஓரடி ரெண்டடி
ஒசந்த கண்ணாடி
மாணிக்கம் மத்தளம்
சிமிக்கி
சிற்றாடை
பாப்பாரப் பெண்ணுக்குப்
பத்தினிக் கல்யாணம்.
24
*
* *
மாமன் வீட்டுக் கல்யாணம்
மனசுக் குகந்த பாயாசம்
சேமியா விலேசெய்த
சிவப்புச் சர்க்கரை
லட்டு
மாமியாள் கையிலே
சுட்ட
மரிக்கின் மாவுப் புட்டு.
25
*
* *
மகாராஜ ராஜஸ்ரீ
மண்டையிலே பிளாஸ்திரி
மதுரையிலே ஆஸ்பத்திரி.
26
*
* *
|