ஐய
ஐயாசாமி கொய்யாப்பழம்
அடுப்பிலே போட்டால் மிய்யா மிய்யா.
14
* * *
குஸ்திக்காரன் நானடா -
அடேதடிமுண்டா
வெட்டிவேலை செய்யவேண்டா
- அடேதடி
முண்டா.
15
* * *
வாடவெற்றிலை வதங்கவெற்றிலை
வாய்க்கு நல்லால்லை
குருவிகுடைந்த
கொய்யாப்பழம்
கொண்டைக்கு நல்லால்லை.
16
* * *
துடப்பக்கட்டைப் பூசை -
அதுலே கொஞ்சம்
ஆசை
அம்மா சுட்ட பணியாரம் -
அப்பா கொண்டாந்த
கடியாரம்
அம்மா போட்ட கோலம் -
அங்கிட்டுப்
போனால் பாலம்.
17
* * *
வீட்டுமேலே
கோழிக்குஞ்சாம்
கிய்யாம்
கிய்யாம்
ஆற்றுமேலே ரெண்டொதையாம்
டையாம் டையாம்.
18
* * *
சின்ன உலக்கை குத்து
குத்து
பெரிய உலக்கை சந்தைக்குப் போ.
19
* * *
மலைமேலே குண்டு
மல்லிகைப்பூச் செண்டு
உங்கப்பன் வளர்க்கிற
மீசை
உங்காத்தாள் சுட்ட
தோசை.
20
* * *
|