கட
கடலோரத்திலே கப்பல்பார்
கப்பலிலே ஆயாபார்
ஆயா கையிலே தட்டைப்பார்
தட்டுமேலே பிள்ளையைப்பார்
பிள்ளைகையில் பழத்தைப்பார்
பழத்துக்குள்ளே பூச்சிபார்
பூச்சிக்குள்ளே கூண்டுபார்
கூண்டுக்குள்ளே கிளியைப்பார்
கிளிவாயிலே பழத்தைப்பார்
பழத்துக்குள்ளே பூச்சிபார்
ஆயாவுக்கு இடுப்பைச்சுற்றிப்
பேனைப்பார்.
9
* * *
தலைகாணி - உங்கப்பன்
களவாணி.
10
* * *
கள்ளுக்கடை அண்ணாச்சி
என்கணக்கு என்னாச்சு?
வெள்ளிப்பணம் ஒண்ணாச்சு
விடியற்கால நேரமாச்சு.
11
* * *
ஆரையா கடையிலே
ஏனையா பேசலே
போடையா ஒண்ணரை
பூப்போட்ட கிளாசிலே.
12
* * *
ஏ ஏ கிழவா சண்டைக்கா
வாறே?
வாழைத்தண்டைத் தின்னுப்பிட்டு
வம்புக்கா வாறே?
13
* * *
|