பக்கம் எண் :

புலம

புலம்பல்

ஒப்பாரி

கொத்துமல்லி பூப்பூக்க - என்னைப்பெற்ற அம்மா
        கொடிகொடியாக் காய்காய்க்கக்
    கோமுட்டி பெற்றபெண்ணு - என்னைப்பெற்ற அம்மா
        குழந்தையிலே அறுக்கிறேனே!
  

1

வெங்காயம் பூப்பூக்க - என்னைப்பெற்ற அம்மா
        வரிவரியாக் காய்காக்க
    வாணிச்சி பெற்றபெண்ணு - என்னைப்பெற்ற அம்மா
        வயசிலே அறுக்கிறேனே!

2

மதுரையிலே கூடாரம் - என்னைப்பெற்ற அம்மா
        மல்லிகைப்பூ வியாபாரம்
    மல்லிகைப்பூக் கேட்கப்போனால் - என்னைப்பெற்ற அம்மா
        மரத்துக்கொண்ணு கொடுப்பாரே!

3

சந்தையிலே கூடாரம் - என்னைப்பெற்ற அம்மா
        சாமந்திப்பூ வியாபாரம்
    சீதைபோய்ப் பூக்கேட்டால் - என்னைப்பெற்ற அம்மா
        செடிக்குஒண்ணு கொடுப்பாரே! 
              

4

மலைமேலே மாடுமேயும் - என்னைப்பெற்ற அம்மா
        மணிக்குழாய் ஊதிவரும்
    மணிக்குழாய்ச் சத்தங்கேட்டு - என்னைப்பெற்ற அம்மா
        மங்கை புலம்புறேனே!

5      

செடியோரம் மாடுமேயும் - என்னைப்பெற்ற அம்மா
        சீமைக்குழாய் ஊதிவரும்
    சீதை புலம்புறது - என்னைப்பெற்ற அம்மா
        சீமைக்கெல்லாம் கேக்கலையோ!

6

பத்துப் பவுன்வாங்கி - என்னைப்பெற்ற அம்மா
        பர்த்தாவுக்குக் காப்படித்துப்
    பத்தூருக் தட்டார்வந்து - என்னைப்பெற்ற அம்மா
        பர்த்தாஎங்கேண்ணு கேட்டார்களே.

7