பத
பத்தடுக்கு மெத்தையிலே
- என்னைப்பெற்ற அம்மா
படிக்கிறாருண்ணு நான்இருந்தேன்
படிப்பை மறந்திட்டாரோ
- என்னைப்பெற்ற அம்மா
பரலோகம்போய்ச் சேர்ந்துட்டாரோ?
8
எட்டுப் பவுன்வாங்கி -
என்னைப்பெற்ற அம்மா
எசமானுக்குக் காப்படித்து
எட்டூருத் தட்டார்வந்து -
என்னைப்பெற்ற அம்மா
எசமானெங்கேண்ணு கேட்டாங்களே!
9
எட்டடுக்கு மெத்தையிலே -
என்னைப்பெற்ற அம்மா
எழுதுறாருண்ணு நானிருந்தேன்
எழுத்தை மறந்துட்டாரோ -
என்னைப்பெற்ற அம்மா
எமலோகம்போய்ச் சேர்ந்துட்டாரோ?
10
தலைவலிக்கு தென்றாரே -
என்னைப்பெற்ற அம்மா
தலைசாய்ந்து படுத்தாரே
தனிச்ச ரெயிலுவருமே - என்னைப்பெற்ற
அம்மா
தனிமருந்து தான்வருமே!
11
நீல வளையல்போட்டு - என்னைப்பெற்ற
அம்மா
நெல்லிக்காய் முகப்புவச்சு
நீலியுடை வாசலிலே - என்னைப்பெற்ற
அம்மா
நெடுநாளு வாழலையே!
12
பச்சை வளையல்போட்டு -
என்னைப்பெற்ற அம்மா
பாகற்காய் முகப்புவச்சுப்
பாவியுடை வாசலிலே - என்னைப்பெற்ற
அம்மா
பாதிநாள் வாழலையே!
13
கட்டைப் புளியமரம் - என்னைப்பெற்ற
அம்மா
கல்கண்டு காய்ச்சமரம்
கல்கண்டு தின்றோமம்மா
- என்னைப்பெற்ற அம்மா
களைசோர்ந்து நிற்கிறோமே!
14
மொட்டைப் புளியமரம் -
என்னைப்பெற்ற அம்மா
முட்டாயி காய்ச்சமரம்
முட்டாயி தின்றோமம்மா
- என்னைப்பெற்ற அம்மா
முகஞ்சோர்ந்து நிற்கிறோமே!
15
|