பக்கம் எண் :

சு

புலம்பல்

279

சுருட்டைப் புளியமரம் என்னைப்பெற்ற அம்மா
        சூதாடும் நந்தவனம்
    சூதாடி வீடுவந்தால் - என்னைப்பெற்ற அம்மா
        சூரியனே கையெடுக்கும்.

16

பரட்டைப் புளியமரம் - என்னைப்பெற்ற அம்மா
        பந்தாடும் நந்தவனம்
    பந்தாடி வீடுவந்தால் - என்னைப்பெற்ற அம்மா
        பரமசிவன் கையெடுப்பார்.
      

17

தலையெல்லாம் நான்சீவி - என்னைப்பெற்ற அம்மா
        தாழம்பூ வச்சாலும்
    தலையிலே போட்டஎழுத்து - என்னைப்பெற்ற அம்மா
        தாய்கூட அறியலையே!
  

18

மண்டையெல்லாம் நான்வகிர்ந்து - என்னைப்பெற்ற அம்மா
        மல்லிகைப்பூ வச்சாலும்
    மண்டையிலே போட்டஎழுத்து - என்னைப்பெற்ற அம்மா
        மாதாகூட அறியலையே!

19

அச்சடிமெல் லியசவுக்கு - என்னைப்பெற்ற அம்மா
        ஆனைமுக முந்தாணி
    அண்ணன்தம்பி போட்டகோடி - என்னைப்பெற்ற அம்மா
        அத்தனையும் பட்டாச்சே!

20

முத்தடி மெல்லியசவுக்கு - என்னைப்பெற்ற அம்மா
        குதிரைமுக முந்தாணி
    மூத்தார்வந்து போட்டகோடி - என்னைப்பெற்ற அம்மா
        முழங்காலுக்கும் எட்டலையே?
      

21

தாலிசெய்த தட்டான்கூட - என்னைப்பெற்ற அம்மா
        தகடுவச்சுச் செய்தானே
    தாலிக் கொடிக்குப்பதிலாய் - என்னைப்பெற்ற அம்மா
        நூலைக்கோத்துக் கொடுத்தானே!
  

22

என்னதான் செய்வேனம்மா - என்னைப்பெற்ற அம்மா
        ஏதுதான் செய்வேனம்மா
    பொன்னான புருசன்இப்போ - என்னைப்பெற்ற அம்மா
        போயிட்டாரே சிவலோகம்!       
              

23