New Page 1
கும்மி
நன்னன்னா கொட்டவும் நாளாச்சு
- அம்மா
நாணயமான ஏரிக்குள்
ளேதான்
ஏரிக்குள் ளேஒரு படகு
போகுது
ஏலேலம் கொட்டடி கூலிக்காரி.
1
கல்லு மலைமேலே கல்லுருட்டி
- அந்தக்
கல்லுக்கும் கல்லுக்கும்
அணைபோட்டு
மதுரைக் கோபுரம் தெரியக்
கட்டி - நம்ம
மன்னவன் வாறதைப் பாருங்கடி.
2
இரும்பு நாற்காலி போட்டுக்கிட்டு
- அவர்
எண்ணெயும் தேச்சுத்
தலைமுழுகி
எல்லா வேலையும்
முடிச்சுக்கிட்டு - அவர்
எப்போ வருவாரு கச்சேரிக்கு?
3
வாறாரு போறாரு என்றுசொல்லி
- அவள்
வாழை யிலையிலே
பொங்கல் வச்சால்
வந்தாப் போலேதான் வந்துகிட்
டிருந்து
வெண்கலக் கூடாரம்
அடிச்சாராம்.
4
புற்றுமண்ணை வெட்டிப்
பொங்கல்வைத்து - அவள்
புள்ளை தவத்துக்குப்
போகையிலே
புள்ளையும் கொடுப்பார்
புண்ணிய சாலி
புன்னை மரமேநீ தான்சாட்சி.
5
வண்ணான் தப்புற கல்லுமேலே
- அடா
வழி நடக்கிற சேவகரே
சித்திரை மாசம் கலியாணம்
- நாங்கள்
சொல்லிவிட்டுப்
போனோம் பட்டாளம்.
6
கொண்டவனை அடிக்கிற பெண்டுகளா
- உங்கள்
தொண்டைக்கு என்னாங்கடி
கம்மலு
தொண்டை வலிக்குச் சாராயம்
- அந்தத்
தொடை வலிக்கு வெந்நீரு.
7
|