பக்கம் எண் :

New Page 1

தெம்மாங்கு

செம்பிலே சிலைஎழுதி - மாமா
        செல்வத்திலே நான்பிறந்தேன்

வம்பிலேதான் கைகொடுத்து - மாமா
        வார்த்தைக் கிடம்ஆனேனே!

1

கண்டி கொளும்பும்கண்டேன் - சாமி
        கருங்குளத்து மீனுங்கண்டேன்

ஒண்டி குளமும்கண்டேன் - சாமி
        ஒயிலாளைக் காணலையே!  
                  

2

ஏழுமலைக் கந்தப்பக்கம் - சாமி
        இஞ்சிவெட்டப் போனபக்கம்

    கண்சிவந்து வந்ததென்ன - சாமி
        கடுங்கோபம் ஆனதென்ன?

3

மூக்குத்திக் தொங்கலிலே - குட்டி
        முந்நூறு பச்சைக்கல்லு

    ஆளைத்தான் பகட்டுதடி - குட்டி
        முந்நூறு பச்சைக்கல்லு.

4

சந்தனம் உரசுங்கல்லு - குட்டி
        தலைவாசலைக் காக்குங்கல்லு

    மீன்உரசுங் கல்லுக்கடி - குட்டி
        வீணாசைப் பட்டாயோடி.

5

ஆசைக்கு மயிர்வளர்த்து - மாமா
        அழகுக்கொரு கொண்டைபோட்டுச்

    சோம்பேறிப் பயலுக்குநான் - மாமா
        சோறாக்க ஆளானேனே!

6