பக்கம் எண் :

New Page 1

4

மலையருவி

வெள்ளைவெள்ளை நிலாவே - சாமி
        வெளிச்சமான பால்நிலாவே

    கள்ள நிலாவேநீ - சாமி
        கருக்கலிட்டால் ஆகாதோ?

7

கும்பகோணம் ரெயிலுவண்டி - குட்டி
        குடிகெடுத்த தஞ்சாவூரு

    தஞ்சாவூரு தாசிப்பொண்ணு - குட்டி
        தாயைமறக் கடிச்சாளடி.

8

வெட்டிப்போட்ட காட்டுக்குள்ளே - குட்டி
        வெறகொடிக்கப் போறபொண்ணே

    கட்டைஉன்னைத் தடுத்திடாதா - குட்டி
        கரடிபுலி தாவிடாதா?

9

ஆத்திலே தலைமுழுகி - குட்டி
        ஆயிரங்கால் பட்டுடுத்தி

    ஊத்துப்பக்கம் உட்காந்துநீ - குட்டி
        போட்டுக்கோடி வெற்றிலையை.

10

கொக்குப் பறக்குதடி - குட்டி
        கோணல்வாய்க்கால் மூலையிலே

    பக்கத்திலே உட்கார்ந்துநீ - என்னைப்
        பதறவிட்டுப் போனாயேடி.

11

காப்புக் கலகலென்னக் - குட்டி
        கைவளையல் ரெண்டும்மின்ன

    மூக்குத்தி வேறேமின்னக் - குட்டி
        முகமுங்கூட மின்னுதடி.

12

வண்டியும் வருகுதடி - குட்டி
        வடமதுரை டேசனிலே

    தந்திபோய்ப் பேசுதடி - குட்டி
        தம்புசெட்டி மெத்தையிலே.

13