பக்கம் எண் :

தெம்மாங்கு

5

காளைநல்ல கறுப்புக்காளை - குட்டி
        கண்ணாடி மயிலைக்காளை

    சூடுவச்ச வெள்ளைக்காளை - குட்டி
        சுத்துதடி மத்தியானம்.                     

14

    ஆறுசக்கரம் நூறுவண்டி - குட்டி
        அழகான ரெயிலுவண்டி

    மாடுகண்ணு இல்லாமல்தான் - குட்டி
        மாயமாத்தான் ஓடுதடி.                    

15

    பூத்தமரம் பூக்காதடி - குட்டி
        பூவில்வண்டு ஏறாதடி

    கன்னிவந்து சேராவிட்டால் - என்
        காதடைப்பும் தீராதடி.
   

16

    செக்கச் சிவந்திருப்பாள் - குட்டி
        செட்டிமகள் போலிருப்பாள்

    வாரி முடிஞ்சிருப்பாள் - குட்டி
        வந்திருப்பாள் சந்தைக்கடை.                

17

    முட்டாயி தேங்குழலு - குட்டி
        முறுக்குலட்டுப் பூந்திவடை

தட்டாமே வாங்கித்தாரேன் - குட்டி
        தங்கமேநீ வாய்திறந்தால்.
  

18

    பாசம் பிடிக்கும்தண்ணி - குட்டி
        பலபேர் எடுக்கும்தண்ணி

    அத்தைமகள் எடுக்கும்தண்ணி - குட்டி
        அத்தனையும் முத்தல்லவோ?                

19

    நீட்டினகால் மடக்காமல்நீ - அடி
        நெடுமுக்காட்டை எடுக்காமலே

    காட்டினாயே கருமூஞ்சியை - அடி
        கருங்கழுதை மூஞ்சிபோலே.                  

20