பக்கம் எண் :

சக

6

மலையருவி

சக்கிலியப் புள்ளேநான் - குட்டி
        சாதியிலே எளியசாதி

    சத்தியமாச் சொல்கிறேன்நான் - உன்னை
        எப்போதும் மறக்கமாட்டேன்.
             

21

பச்சைப் புடைவைக்காரி - அம்மா
        பாதிரிவீட்டுத் தண்ணிக்காரி

    கண்டால் வரச்சொல்லுங்க - அம்மா
        காரமடை டேசனுக்கு.                      

22

கம்புநல் லாவிளைஞ்சு - குட்டி
        கதிர்விடும் நாளையிலே

    கம்பைத்தின்னக் கும்பலாத்தான் - குட்டி
        காட்டுக்கிளி பறக்குதடி.                    

23

எல்லாரு வண்டியிலே - சாமி
        எதுக்கும்உத வாதுவரும்

என்புருசன் வண்டியிலே
        ஏலமும் கிராம்பும்வரும்.
             

24

உப்புப்பாரம் ஏத்தும்வண்டி - குட்டி
        உப்பிலிபாளையம் போகும்வண்டி

    உப்புநல்லா வித்துச்சுண்ணா* - உனக்குக்
        கொப்புச்செஞ்சு போடுவேண்டி.                

25

கன்னியா குமரியிலே - குட்டி
        கடுங்குமரி வண்ணாத்தியே

    குன்னிப்பழம் தின்னப்போய்க் - குட்டி
        குருவிநிறம் ஆனாயேடி.                    

26

ஆர்க்காட்டுக் காரப்பெண்ணே - குட்டி
        அழகுநடை நடக்கும்பொண்ணே

    தஞ்சாவூரு ராசாவுக்குக் - குட்டி
        வெண்சாமரை வீசுறாயா?  
                     

27
_____________________________________________________

    * விற்றதென்றால்,