பக்கம் எண் :

கூ

தெம்மாங்கு

7

கூடி இருந்தஇடம் - குட்டி
        கும்மாளம் போட்டஇடம்

    வாழைப்பழம் தின்றஇடம் - குட்டி
        பாழாய்க் கிடக்குதடி.
        

28

நடையிலே பல்விளக்கிக் - குட்டி
        நாணயமாய்ப் போறபொண்ணே

    இடையிலுனக்கு வாழ்வுவந்தால் - குட்டி
        என்னைநீ மதிப்பாயோடி?
                     

29

நல்லநல்ல பில்லைக்காளை - மாமா
        நயனமுள்ள கொம்புக்காளை

    கொம்புக்காளையை வித்துட்டாலும் - நீ
        குமரிகொள்ளப் போறதில்லை.                

30

சந்தையிலே மருக்கொழுந்து - குட்டி
        சரசமாத்தான் விற்குதடி

    கையிலொரு காசும்இல்லை - குட்டி
        கடன்கொடுப்பார் ஆரும்இல்லை.  
             

31

ஆலம் விழுதுபோலே - குட்டி
        அந்தப்பிள்ளை தலைமயிரை

    ஆளுஒண்ணும் பார்க்காமல்தான் - குட்டி
        ஆத்துறாளாம் ஆத்துக்குள்ளே.
   

32

தெற்கத்தி அண்ணன்மாரே - அப்பா
        திருநெல்வேலித் தம்பிமாரே

    என்புருசன் வண்டியைத்தான் - நீங்கள்
        எதிர்க்கவரக் கண்டீங்களா?
          

33

நெத்திக்குச் சுட்டிகட்டி - மாமா
        நேர்விழிக்கு மையெழுதிக்

    கள்ள நடைநடக்கும் - அந்தக்
        கவுண்டப்பிள்ளை எந்தஊரு?                                    

34