க
கார்த்தியில்நான்* கண்டெடுத்த
- குட்டி
கனகமணி ரத்தினத்தைப்
போட்டுத்தான் கழட்டிவைக்கக்
- குட்டி
புண்ணியம்நீ செய்தால்என்ன?
35
போறவனே போறவனே - அடே
பெங்களூரு போறவனே
மாயவனைத் தந்தவனே - ஒரு
மருந்துசொல்லிப்
போடாமூடா.
36
கட்டையெல்லாம் வெட்டிவிட்டு
- அடே
காட்டைஉழப் போறவனே
கஞ்சிக்கவலை தீர்ந்திட்டாலும்
- உனக்குக்
காதடைப்பும் தீராதடா.
37
மூக்குச் சிவந்தபொண்ணே
- அடி
மூணுபணம் கேட்டபொண்ணே
நாக்குச் சிவந்தபொண்ணே
- குட்டி
நான்தாண்டி உன்புருசன்.
38
வட்டவட்டப் பாறையிலே -
குட்டி
வரகரிசி தீட்டையிலே
ஆர்கொடுத்த சாயச்சீலை
- குட்டி
ஆலவட்டம் போடுதடி?
39
ஆருங் கொடுக்கவில்லை -
மச்சான்
அவிசாரிநான் போகவில்லை
வன்பாடு பட்டுநானும் - மச்சான்
வாங்கினேண்டா சாயச்சீலை.
40
சாயச்சீலை ரொம்பச்சிவப்பு
- என்னைக்
கண்டாக்கக் குறுஞ்சிரிப்பு
குறுஞ்சிரிப்பும் கொண்டாட்டமும்
- என்
கூடவந்தால் தெரியுமடி.
41
_______________________________________________
* கார்த்தி -
கார்த்திகை.
|