பக்கம் எண் :

308

மலையருவி

காணிக்கை எல்லாங் கொண்டுவந் தார்களே
        ஆயிரம் பேர்களுன் கோயிலுக்கு
    கொஞ்சி விளையாடும் மாரித்தா யேஉன்னைத்
        தஞ்சமென் றவரைக் காப்பாற்றடி.
  

3

அம்மாஉன் கோவிலைச் சுற்றிவந் தவர்க்கு
        அண்டாது பேய்பிணி எந்த நாளும்
    நாளெல்லாம் நாங்கள் வருந்துகி றோம்அம்மா
        காலன் அணுகாமல் காப்பாற்றடி.

4

வேப்பிலைக் காவடி கட்டிவா றாங்களே
        வேடிக்கை யாஓடி வாறாங்களே
    வாடிக்கை யாகத்தான் ஞாயிற்றுக் கிழமை
        கோடி சனமங்கே வாறாங்களே.
     

5

வண்டியி லேஅங்கே வாறகூட் டங்களைக்
        கண்டு விலக முடியாதடி
    கொண்டு வாறகோழி ஆடுமாடு எல்லாம்
        கோயிலும் கொள்ளாது பாருங்கடி.
      

6

பள்ளு பறைபதி னெட்டுச்சா திகளும்
        பார்த்துப் பணிந்திட வேணுமென்று
    எல்லை மாரிஎல்லை தங்கிவா றாள்நம்ம
        எல்லைக்குக் காவலா மாரியம்மா.
      

7

ஆயிரங் கண்ணுமா ரியைப்பார்க் கணுமென்று
        ஆயிரக் கணக்கா வாறாங்களே
    ஆருந் துணையில்லை காளியம் மாஎன்னை
        ஆதரிக்க வேணுமே மாரியம்மா.        
         

8

            *        * *