பக்கம் எண் :

கும்மி

307

தினைமாவு திரிச்சுக் கிட்டிருந் தேன்அண்ணா
        தெரியாது ஒண்ணும் மரத்தைப்பற்றி
    வினையாக வேங்கையும் தினைக்காட் டுநடுவே
        வீம்புக்கு முளைத்திருக் கிறதென்றாள்.

101

பயப்படா தேமானே வள்ளியம் மாஉனக்குப்
        பரமன் கந்தவேள் துணையிருப்பான்
    பட்சமா இப்போது பாங்கிப்பெண் ணோடேநீ
        பயமில் லாமேஇரு பச்சைக்கிளி.

102

இப்படிச் சொல்லிவிட் டண்ணன்மார் காட்டிலே
        தப்பின தினைக்கதி ரைக்கொய்ய
    இப்பத்தான் நல்ல சமயம்னு நினைத்துத்
        தப்பாமே ஓடிவந் தானேகந்தன்.

103

வேங்கையா நின்ற உருமாறி வந்தந்த
        வேடனை வள்ளியுந் தான்பார்த்து
    மாந்திரி கனைப்போல் மாறுவே சம்போட்ட
        மடையா மானமில்லை யாண்ணுசொன்னாள்.

104

உன்னை மறக்க முடியலை யேமானே
        உன்னாலே கண்ணுக் குறக்கமில்லை
    எந்நாளு மேநாம் சுகமா யிருக்கலாம்
        என்னைக்கை விடாதே பொன்மயிலே.

105

*

மாரியம்மன் கும்மி

கும்மி யடியுங்கள் பெண்டுக ளாநீங்கள்
        கூடியே கும்மி அடியுங்கடி
    நம்மை ஆளும்நல்ல மாரித் தாயை
        நாடிக் கும்மி அடியுங்கடி.

1

மகமாயித் தாயேஉன் மகிமையை அறிந்த
        மனிசர்கள் ஆருமே இல்லையடி
    பகவதி காளியும் காமாட்சி யும்நீயே
        பார்வதி யேஎன்னைக் காப்பாற்றடி.

2
_______________________________________________________

    * இதற்குமேல் உள்ள கண்ணிகள் கிடைக்கவில்லை.