பக்கம் எண் :

306

மலையருவி

ஏது பரியாசம் மிஞ்சுது வேடாஎன்
        சேதி உனக்குத் தெரியாதா
    மாதுஎன் மேலேநீ மையல்கொள் ளவேண்டாம்
        தீது வருமடா திட்டமாத்தான்.
               

93

ஆர்குடி யைக்கெடுக் கவேணு மென்றிங்கே
        ஆண்டிவே சம்போட்டு அலைமோதுறாய்
    பேர்வழங் கணுமென்றால் ஊர்போய்ச் சேரடா
        பெரியபேச் செல்லாம்நீ பேசாமே.

94

உன்னைப்பார்த் தால்வேட ராசன்போ லிருக்குது
        ஒழுங்கில் லாமல் இங்கே வரலாமா
    உனக்கும்உன் பலத்துக்கும் பயப்படு வேனோநான்
        ஓடிப்போ டாதினைக் காட்டைவிட்டு.

95

பாதகி யேபழி காரியே உன்னைநான்
        பார்த்துச்சும் மாபோவேண் ணாநினைத்தாய்
    வாதுசெய் யாமேநீ தோதாஎன் னைக்கூடி
        வந்தால் உனக்குத்தான் சந்தோசண்டி.      
     

96

தம்பிஅண் ணன்மாரு அம்புகொண் டாந்தாலும்
        தாதிமார் என்னை அடித்தாலும்
    தந்திர மாய்நானும் தப்பிக்க வழியும்
        தம்பிரான் தயவாய்க் கொடுத்திருக்கான்.

97

கந்தனும் வள்ளியும் இந்த விதமாகக்
        கைச்சர சம்பண்ணும் வேளையிலே
    கந்தன்கை யுங்காலும் குலையும் உதறவே
        கானக் குறவரும் வந்தார்களே.

98

வேடரைப் பார்த்து வெலவெலத் துக்கந்தன்
        வேணுண்ணு வேங்கை மரமானான்
    வெயிலெல்லாம் மறைந்து விதம்வித மாய்க்கிளை
        வீசிக்கண் கூசப் பசுமையானான்.

99

இந்தவே டிக்கையைக் கண்டவே டரெல்லாம்
        தங்கைவள் ளிஅம்மனைக் கூப்பிட்டு
    எங்கேயும் இல்லாத இந்தவேங் கைமரம்

        எப்படி யம்மா முளைத்ததென்றார்.
                   

100