பக்கம் எண் :

கும்மி

305

தானே விழுந்ததும் இல்லாம லேவள்ளி
        நாயகி யைஅவ தூறும்சொன் னான்
    கையைப் பிடித்தென்னைத் தூக்கடி பாவிநான்
        பையப்பை யக்கரை சேர்வேனென்றான்.
  

85

கந்தன்சொன் னசொல்லை எல்லாங்கேட் டுவள்ளி
        காதிலே ரெண்டுகை யையும் வச்சுக்
    கருணாகர அருணாசலா குருநாதனே வரமாட்டையா
        அருமையா வந்தென்னை ஆதரின்னாள்.        

86

கந்தனைப் பார்த்துக் கடுகடுப் பாகவே
        கைரெண்டை யுங்காதை விட்டெடுத்து
    கள்ளங் கபடமாக் காட்டுக்கு நீவந்த
        காரணம் கட்டாயம் கஷ்டமென்றாள்.

87

    மெத்தப் படித்தவன் போலேவந் துஎன்னை
        மெதுவாஏ மாற்றலாம் என்று பார்த்தையோ
    பித்துப் பிடித்த வனைப்போலே நீஓட்டம்
        பிடித்தால்தான் தப்புவாய் வேடுவனே.              

88

எட்டாத தேனுக்கு ஏறாத நொண்டி
        கொட்டாவி விட்ட கதைபோலே
    ஏங்கிஏங் கிஇன்னம் என்முகத் தைப்பார்த்து
        ஏமாந்து போகாதே வேடுவனே.

89

அண்ணன்மா ரும்இப்போ அம்பும்வில் லுங்கொண்டு
        அந்தாவ றாங்கபார் வேடுவனே
    அநியாய மாகநீ அழியாமல் பார்த்துக்கொள்
        ஆகாசத் தில்உன்னை வீசிடுவார்.

90

சுற்றிச்சுற் றிவட்டம் போட்டுப்போட் டுநீ
        கத்திக் கழுதைபோல் அலையாதே
    திட்டமா நான்சொன்ன சொல்லைநீ கேக்காட்டித்
        தோழியை விட்டுன்னை அடிக்கச் செய்வேன்.
         

91

பொந்திலே அகப்பட்ட மந்தியைப் போலுன்னைச்
        சந்துசந் தாகக் கிழிப்பாங்கடா
    நிந்தனை என்மேலே சொல்லாதே வேடுவா
        மந்தமா இங்கேநீ தங்காதேடா.

92

_______________________________________________________
    91. கேக்காட்டி - கேட்காவிட்டால்.