பக்கம் எண் :

ஆறு

304

மலையருவி

ஆறு முகனான ஆண்டிப்பண் டாரமும்
        அங்கிருந் தபல காரமெல்லாம்
    அமைதியா வும்மெத்தப் பெருமையா வுந்தின்று
        ஆசீர்வா தம்செய்தான் வள்ளியையே. 
          

77

இப்படி இருக்கும் போது திடீரென்று
        எப்படி யோகளை வந்துமூடி
    அப்படி யேசாய்ந்து ஆவிபோ றாப்போலே
        அரண்டு மிரண்டு புரண்டான் கந்தன்.      
      

78

மாவென்று சொல்லிநீ நஞ்சைத்தந் தாய்பாவி
        மருந்தென்று தெரியாமல் நானுந்தின்றேன்
    மாதேஎன் தொண்டை வறளுத டிஇப்
        போதேஎன் உயிரும் போகுமடி.

79

எட்டிப் பழமோபா சாணமோ என்னமோ
        என்கிட்டக் கொண்டாந்து வைத்தாயோடி
    ஏழை பரதேசிக் கிப்படி யுஞ்செய்து
        எமலோகம் சேர்க்கவும் பார்த்தாயடி.       
     

80

தண்ணீர்வே ணுமென்று தயங்கின தாத்தாவே
        தண்ணீர்கொண் டாந்தேன்தா கத்தைத்தீர்க்கத்
    தயவாநீ குடிச்சிட்டுத் தாகத்தைத் தீர்த்திட்டுத்
        தாத்தாஎன் னைவிட்டு நாட்டுக்குப்போ.

81

நீகொண் டாந்ததண்ணீர் என்கண்ணுப் பார்வைக்கு
        நீலமாத் தோணுது நீலிப்பெண்ணே
    சாணு வயிற்றுக்கு நீகொடுத் தமாவு
        சந்தேகந் தீராது சண்டாளியே.

82

தண்ணீரி லேநான் நஞ்சு கலந்தேண்ணு
        எண்ணிநீ பேசாதே படுபாவி
    கன்னிநான் உனக்கு என்னதீ மைசெய்தேன்
        கேணியில் இறங்கி நீயேகுடி.

83

வள்ளி கிழவனைக் கேணிக்குக் கொண்டுபோய்
        மெள்ளமெள் ளஇறக் கியேவிட்டாள்
    தள்ளாடித் தள்ளாடித் தண்ணீருங் குடித்துத்
        தானேதண் ணீரிலே யும்விழுந்தான்.      
        

84