ப
பழுத்த பழம்போலே பாதையில்
இருந்த
பண்டாரத் தைஅண்ணன்
மாரும்பார்த்துப்
பணிவாய்க்கிட் டேவந்து
இனிமையா வும்பேசி
பணிந்தார்கள் பண்டாரத்
தைத்தானே.
69
ஐயாவே பண்டாரச் சாமிநீ
எங்களை
ஆண்ட குலதெய்வம்
போலிருக்கே
அடிமேல் அடிவைத்துத் தடுமாறி
இடம்மாறி
ஆண்டவ னேஇங்கே ஏன்நீவந்தாய்?
70
சொல்கிறேன் கேளுங்கள்
ஐயாமா ரேநான்
தூர வடபக்கம் போய்
வாறேன்
தொல்லை பிடித்தஇந்தப்
பாழும் உலகிலே
நல்ல சுகம்இல்லை ஐயாமாரே.
71
உங்களை யேதஞ்சம் மென்றுநம்
பிவந்தேன்
உலகெல்லாம் எனக்கொரு
தஞ்சமில்லை
உங்களுக் குஉண்மை யெல்லாம்நான்
சொல்லுவேன்
உங்களை விட்டுப்
பிரியமாட்டேன்.
72
அப்படி யேஉங்கள்
சொற்படி செய்கிறோம்
இப்படி யேஎங்கள்
கூடவாங்க
தப்பாம லேஎங்கள் தங்கச்சி
வள்ளியும்
அப்பான்னு உங்களைக்
காப்பாற்றுவாள்.
73
அண்ணன்மார் ஆனந்த மாகப்பண்
டாரத்தை
அன்பான வள்ளிகிட்
டக்கொண்டுபோய்
அம்மா நம்குல தெய்வம்போல்
இவரை
ஆதரிக்க வேணுன்னு சொன்னார்கள்.
74
அண்ணன்மார் சொல்லைத்
தட்டாம லேவள்ளி
ஆதரித் தாளந்தப்
பண்டாரத்தை
ஆண்டிக்கு வேண்டிய தேனும்
பழமும்
தினைமாவும் கொண்டாந்து
வைத்தாளே.
75
ஐயாவே பண்டார சாமிக ளேநான்
அன்பாக வைத்த பலகாரத்தைத்
தின்று பசிக்களை ஆறுமை
யாஇன்னம்
தேனும்பா லுந்தரு வேன்னுசொன்னாள்.
76
|