New Page 1
முத்துமாரி
ஆதியிலே அமைந்த சக்தி
எங்கள்முத்து மாரி -
அம்மா
ஆள்கிறாளாம் பூமி யெல்லாம்
சிங்கத்துமேல் ஏறி.
1
அடுத்தால் சமயபுரம்
எங்கள் முத்து மாரி
- அம்மா
ஆதிசிவன் பெண்சாதியாம்
சிங்கத்துமேல் ஏறி.
2
கன்னபுரம் வந்திருப்பாள்
எங்கள் முத்து மாரி
- அம்மா
புன்னை நல்லூர் வந்திருப்பாள்
சிங்கத்துமேல் ஏறி.
3
தஞ்சா வூரு ராசாவுக்கு
எங்கள் முத்து மாரி
- அம்மா
சஞ்சலத்தைத் தீர்த்தவளாம்
சிங்கத்துமேல் ஏறி.
4
நார்த்த மலையி லேயிருப்பாள்
எங்கள் முத்து மாரி
- அம்மா
நாராயணன் தங்கச்சியாள்
சிங்கத்துமேல் ஏறி.
5
வீராம்பட்டணம் வந்திருப்பாள்
எங்கள் முத்து மாரி
- அம்மா
வீரரெல்லாம் கொன்றவளாம்
சிங்கத்துமேல் ஏறி.
6
தாராபுரம் வந்திருப்பாள்
எங்கள் முத்து மாரி
- அம்மா
தீராப்பிணி தீர்ப்பவளாம்
சிங்கத்துமேல் ஏறி.
7
|