பக்கம் எண் :

New Page 1

312

மலையருவி

கும்மி பாடிக் குப்பம் வருவாள்
        எங்கள் முத்து மாரி - அம்மா
    கொலுவிருந்து காப்பவளாம்
        சிங்கத்துமேல் ஏறி.

8

தில்லைநகர்க் காளியம்மா
        எங்கள் முத்து மாரி - அம்மா
    பிள்ளைவரம் தந்தவளாம்
        சிங்கத்துமேல் ஏறி.
  

9

நாச்சியார் கோவில் வந்திருப்பாள்
        எங்கள் முத்து மாரி - அம்மா
    ஆச்சரிய மாவருவாள்
        சிங்கத்துமேல் ஏறி.
   

10

ஒழுக மங்கலம் வந்திருப்பாள்
        எங்கள் முத்து மாரி - அம்மா
    பழுதில்லாமே காப்பவளாம்
        சிங்கத்துமேல் ஏறி.

11

கனியாக் குறிச்சி வடிவழகி
        எங்கள் முத்து மாரி - அம்மா
    தனிவழியா வாறவளாம்
        சிங்கத்துமேல் ஏறி.

12

நல்லநாகப் பட்டணம் வருவாள்
        எங்கள் முத்து மாரி - அம்மா
    நெல்லுக்கடை மாரியம்மா
        சிங்கத்துமேல் ஏறி.

13

கீரந்த குடிவருவாள்
        எங்கள் முத்து மாரி - அம்மா
    கோரிக்கைக்கு வரந்தருவாள்
        சிங்கத்துமேல் ஏறி.

14

தீராவினை எல்லாந் தீர்ப்பாள்
        எங்கள் முத்து மாரி - அம்மா
    தேசமெல்லாத் தையுங்காப்பாள்

        சிங்கத்துமேல் ஏறி.
                                               

15