பக்கம் எண் :

சமயபுரம

தெய்வம்

313

சமயபுரம் வந்திருக்கும்
        எங்கள் முத்து மாரி - அம்மா
    சத்தி யெல்லாம் சாமியடி
        சிங்கத்துமேல் ஏறி.
         

16

கன்னபுரத்தி லேஇருக்கும்
        பொன்னே முத்து மாரி - அம்மா
        வந்தாயேநீ சீறி
    என்ன சொல்வோம் உன் மகிமை
        அம்மா முத்து மாரி?                 
   

17

தஞ்சாவூரு புன்னை நல்லூரு
        தாயே முத்து மாரி - உன்னைத்
        தஞ்ச மென்றோம் கோரி

    தயவு வைத்துக் காத்தாள் அம்மா
        சிங்கத்துமேல் ஏறி.                           

18

ஆயிமக மாயி அவள்
        இல்லாத இடம் உண்டா - இந்தப்
        பூமி என்ன ரெண்டா

    அனுதினமும் துதிக்காதவர்
        தலைஇரும்புத் துண்டா?                       

19

நார்த்தா மலையி லேயிருப்பாள்
        சிங்கத்துமேல் அங்கே - அம்மா
        நாராயணன் தங்கை

பார்க்காமலே நீயிருந்தால் நாம்
        பிழைக்கிறது எங்கே?                     

20

சாதி யில்லை பேதம் இல்லை
        ஆதிபரஞ் சோதி - அம்மே
        வாந்திபேதி வியாதி - இந்தச்

    சாதிக் கெல்லாம் நடக்குதம்மா

        உன்தவறா நீதி.
                                                          

21