ம
மாவிளக்குச் சட்டிகளும்
காணிக்கையும் கோடி
- மகம்
மாயி உன்னை நாடி
மனப்பத்தியாப் படைச்சிடுவார்
மக்கள் உன்னைத் தேடி.
22
காளியென்றும் பேச்சியென்றும்
கணக்கில் லாப்பேர்
எடுப்பாள் - யம
காலனையும் தடுப்பாள்.
அனுதினமும் வணங்கி வந்தால்
ஆயிசுவரம் கொடுப்பாள்.
23
ஒருமனசா நிதநிதமும்
உன்னையே நாங்கள்
நம்பி
உருகுகிறோமே வெம்பி
மறுகிநீ இருக்கலாமா
சிங்கத்துமேலே குந்தி?
24
__________
மாரியம்மன்
பாட்டு
கண்கண்ட தெய்வம் மாரி
அம்மா - நம்ம
ஈசுவரி மாரி அம்மா
கண்ணன்ராச கோபாலன்
தங்கச்சியும் நீயே
கலியுகத்தி லேவந்து
அவதாரம் எடுத் தாயே
என்னநான் சொல்வேன் உன்
மகிமையைத் தாயே
ஏழைமக்க ளைநீயும்
ஆதரிப் பாயே.
1
எத்தனையோ பக்தர்கள்
உன்னை அடுத்து
ஏறினார்களே சொர்க்கம்
பாவத்தைத் தடுத்து
பத்தினியே நீஉன்
அருளெல்லாம் கொடுத்து
பார்த்துக்கொள்ள வேணுமே
ஏழை மக்களைக்
காத்து.
2
|