ச
சிங்கத்து மேலேஏறி எங்கேயும்
வருவாள்
தாங்கமுடி யாதஅம்மை பூட்டியே
விடுவாள்
நீங்க வேப்பிலை விபூதி
எல்லாம் தருவாள்
நினைந்த இடத்துக் கெல்லாம்
துணையாத்தான் வருவாள்.
3
ஆயிரங்கண் மாரிஇல் லாதஇடம்
உண்டா
அவஇருக்கிற பூமி என்னசொல்
ரெண்டா
மாயமாத் தான்வருவாள்
பறக்கிற வண்டா - அவள்
மகிமை தெரியாத மனிசரும்
உண்டா?
4
ஆவணி மாசம் கடைசிக் கிழமை
- அவள்
கோயிலுக்கு வாற சனத்தோடே
பெருமை
காவடி களையெல்லாம் கட்டிவாற
அருமை - அவள்
பாதம் பணிந்திட்டால்
தீருமே வறுமை.
5
வந்த சனமெல்லாம் வலப்பக்கம்
சுற்றி - வந்து
வரிசை வரிசையாத்தான்
தலையிலேபால் ஊற்றி
இளநீர்த் தண்ணியுங்கூட
ஏராளமா ஊற்றி
கணக்கில்லா மல்தான்நல்ல
காணிக்கையும் கொடுத்து.
6
தீச்சட்டி களைத்தலை மேலே
எடுத்து
திருமக மாயிஅம்மா சந்நிதி
அடித்து
ஆடுமாடு கோழி தேங்காய்
பழமெல்லாம் கொடுக்க
ஆடிஓடிப் பாடிச் சாடித்தேடி
வாறாங்க பாரம்மா.
7
________
பூசாரி பாட்டு
ஓம் இண்ணு உச்சரிப்பேன்
ஆம் இண்ணு நிச்சயிப்பேன்.
1
ஓதுவேன் மதன் கதையை -
என்
மாதுரனே துர்க்கிவீதி.
2
ஓரி மயான ருத்ரி
வாரி காட்டேரி சூரி!
3
|