உ
உருண்டை கைமா கவாப்பு
தொண்டை ரொட்டியும் கலந்து
19
உப்புக்கரு வாட்டுப்
பொரியல்
அப்பளம் கஞ்சா சுருட்டு
20
ஓர் நிறைந்த பீப்பாயிலே
நேர் நிறைந்த சாராயம்
21
உதிரத்தை யும்புரட்டி
உனக்கு முன்னே நான்படைத்தேன்.
22
உறுதியா ஓடிவாங்க
பிரீதியோடே எனக்கு முன்னே.
23
________
கரகப் பாட்டு
ஒண்ணாங் கரகமடி கன்னி -
ஓகோ - என்தாயே
ஓடிவந்து பூசைவாங்கு இப்போ
- தாயே
1
ரெண்டாங் கரகமடி கன்னி
- ஓகோ - என்தாயே
ரணகரகம் பொன்னாலே இப்போ
- தாயே
2
மூணாங் கரகமடி கன்னி -
ஓகோ - என்தாயே
முத்தாலே பொன்கரகம் இப்போ
- தாயே
3
நாலாங் கரகமடி கன்னி -
ஓகோ - என்தாயே
நாடிவரும் பூங்கரகம் இப்போ
- தாயே
4
அஞ்சாங் கரகமடி கன்னி -
ஓகோ - என்தாயே
அசைந்தாடும் பொன்கரகம்
இப்போ - தாயே
5
ஆறாங் கரகமடி கன்னி -
ஓகோ - என்தாயே
அசைந்தாடும் பூங்கரகம்
இப்போ - என்தாயே
6
ஏழாங் கரகமடி கன்னி -
ஓகோ - என்தாயே
எடுத்தாடும் பொன்கரகம்
இப்போ - என்தாயே
7
எட்டாங் கரகமடி கன்னி -
ஓகோ - என்தாயே
எடுத்தாடும் பூங்கரகம் இப்போ
- தாயே
8
ஒன்பதாம் கரகமடி கன்னி
- ஓகோ - என்தாயே
ஓடிவந்து பூசைவாங்கு
இப்போ - தாயே
9
|