பக்கம் எண் :

New Page 1

324

மலையருவி

முப்பதாம் வயசுத் துவக்கத்தி லேயவர்
        முழுமனிச னான காலத்திலே
    முன்னோர் வழக்கத்தை அநுசரித் தவர்
        முழுக்குஞா னஸ்நானம் பெற்றாராம்.
                            - தன்னன னானன
  

8

மூணு வருசமாப் பூமியி லேவீச
        ரோடே தனியாத் திரிகையிலே
    வானவர் செய்யுமற் புதமெல் லாத்தையும்
        வரிசை வரிசையாச் செய்தாராம்.
                            - தன்னன னானன

9

கானாஊரு கல்யாணத்தி லிருந்து
        கல்லறைக் கவர் போகுமட்டும்
    கணக்குமில் லைஒரு வழக்குமில் லைமனிசர்
        கண்ணுக்கு முன்செய்த அற்புதங்கள்.
                            - தன்னன னானன
      

10

* *       *

(வேறு சந்தம்)

தாவீதின் ஊர்தனிலே - சின்னப்பாலகா
        சத்திரத்துப் பக்கத்திலே - சின்னப்பாலகா
        

1

மாட்டுக் கொட்டத்திலே - சின்னப்பாலகா
        மாடடையும் கொட்டத்திலே - சின்னப்பாலகா        

2

அஞ்சாறு மாட்டுக்குள்ளே - சின்னப்பாலகா
        அழுதுநீ பிறக்கையிலே - சின்னப்பாலகா        

3

மாடெல்லாம் கதறையிலே - சின்னப்பாலகா
        மனிசரெல்லாம் தூங்கையிலே - சின்னப்பாலகா   
    

4

சம்மனசு வானத்துலே - சின்னப்பாலகா
        சரமாரியா இறங்கையிலே - சின்னப்பாலகா    
   

5

மெய்ம்மறந்து போனார்களே - சின்னப்பாலகா
        மேய்ப்பர்வயற் காட்டிலேயே - சி்ன்னப்பாலகா.
                            

6