பக்கம் எண் :

பல

326

மலையருவி

    பல்லு முளைக்கலையோ - சின்னப்பாலகா
        பால்குடி மறக்கலையோ - சின்னப்பாலகா.
           

21

பாலுக்கட்டி தின்னலையோ - சின்னப்பாலகா
        பருப்புஞ்சோறும் சேரலையோ - சின்னப்பாலகா.       

22

மூணுவய சாகலையோ - சின்னப்பாலகா
        முகம்பார்த்துச் சிரிக்கலையோ - சின்னப்பாலகா.       

23

மூணுபேர் உனக்கில்லையோ - சின்னப்பாலகா
        மும்மூர்த்தியும் நீயல்லவா - சின்னப்பாலகா.

24

நாலுகாலுப் பாய்ச்சலிலே - சின்னப்பாலகா
        நடக்கஇன்னம் துவக்கலையோ - சின்னப்பாலகா.
      

25

நாலுவய சாகலையோ - சின்னப்பாலகா
        நல்லாத்தானும் நடக்கணுமே - சின்னப்பாலகா      
 

26

அஞ்சுவய சாகலையோ - சின்னப்பாலகா
        அறியாப் பருவமில்லையோ - சின்னப்பாலகா.

27

கொஞ்சிவிளை யாடலையோ - சின்னப்பாலகா
        குழந்தைசேசு நாதாசாமி - சின்னப்பாலகா.

28

அரவங்கேட்ட நேரத்திலே - சின்னப்பாலகா
        அழுகநீ பார்க்கலையோ - சின்னப்பாலகா.

29

ஆறு வயசுமாச்சே - சின்னப்பாலகா
        அழுகலாமா ஆம்பளையே - சின்னப்பாலகா.

30

அடுத்தவீட்டுப் பிள்ளைகளைச் - சின்னப்பாலகா
        அடித்துவிளை யாடையிலே - சின்னப்பாலகா.

31

அம்மாஉன்னை அடிச்சாங்களா - சின்னப்பாலகா
        அழுகழுக வச்சாங்களா - சின்னப்பாலகா.

32

சட்டிபானை எல்லாம்வச்சுச் - சின்னப்பாலகா
        கூட்டாஞ்சோறு ஆக்கினையா - சின்னப்பாலகா.       

33

மட்டிப்பிள்ளை கூடச்சேர்ந்து - சின்னப்பாலகா
        மண்ணிலே விளையாடினையா - சின்னப்பாலகா.
                   

34