பக்கம் எண் :

330

மலையருவி

    வருசக்கணக்காய்ப் பேய்பிடித்த - சின்னப்பாலகா
        வாலிப னுக்கிரங்கிச் - சின்னப்பாலகா            

77

விரட்டலையோ அப்போதேதான் - சின்னப்பாலகா
        விதவித மானபேய்களைச் - சின்னப்பாலகா.         
 

78

குனிந்துமண்ணில் எச்சில்துப்பிச் - சின்னப்பாலகா
        குழைக்கலையா சேறுபூசச் - சின்னப்பாலகா.

79

குளத்திலேபோய்க் குளித்துவரச் - சின்னப்பாலகா
        குருடனுக்குச் சொல்லலையா - சின்னப்பாலகா.

80

குட்டைய னானதாலே - சின்னப்பாலகா
        குடுகுடென்று ஓடிப்போய்ச் - சின்னப்பாலகா 
      

81

காட்டத்தி மரத்திலேறிச் - சின்னப்பாலகா
        கண்ணாலுன்னைப் பார்க்கையிலே - சின்னப்பாலகா
    

82

மந்திரக் காரனைப்போல் - சின்னப்பாலகா
        மரத்துக்கிட்ட வந்துநீ - சின்னப்பாலகா.

83

அண்ணாந்து பார்த்தவனைச் - சின்னப்பாலகா
        அருமையாநீ கூப்பிட்டையே - சின்னப்பாலகா.
           

84

பாவம்அந்தக் குட்டைப்பயல் - சின்னப்பாலகா
        பயந்தருண் டிறங்கையிலே - சின்னப்பாலகா   
    

85

பாவியா அவன்இருந்தும் - சின்னப்பாலகா
        பட்சமாநீ பேசலையோ - சின்னப்பாலகா.

86

இழிவான சாதியென்று - சின்னப்பாலகா
        ஈங்குசமாநீ பேசாமே - சின்னப்பாலகா.
 

87

தங்கிஅங் கேசாப்பிட்டுச் - சின்னப்பாலகா
        மங்களவாக்குக் கொடுக்கலையோ - சின்னப்பாலகா    

88

அஞ்சுரொட்டி யைப்பிச்சுச் - சின்னப்பாலகா
        ரெண்டுமீனைச் சேர்த்துப்பிச்சுச் - சின்னப்பாலகா    

89

அஞ்சாயிரம் பேருக்குத்தான் - சின்னப்பாலகா
        அருமையாநீ கொடுக்கலையோ - சின்னப்பாலகா.       

90