ந
நாலுநாளாய்க் கல்லறைக்குள்ளே
- சின்னப்பாலகா
நாற்றப்பிணம்
இருக்கையிலே - சின்னப்பாலகா.
91
நாற்றத்தைச் சகித்துநீ
- சின்னப்பாலகா
நாடிஅங்கே போகலையா
- சின்னப்பாலகா.
92
கல்லறையைப் பார்த்துநீ
- சின்னப்பாலகா
கண்ணீர்விட்
டழுகலையோ - சின்னப்பாலகா.
93
கல்லையும் புரட்டச்சொல்லிச்
- சின்னப்பாலகா
கத்தலையா சத்தம்போட்டுச்
- சின்னப்பாலகா.
94
வாஅப்பா லாசருவேயென்று -
சின்னப்பாலகா
வற்புறுத்திச் சொல்லலையா
- சின்னப்பாலகா.
95
கல்புரட்டச்
சொன்னாற்போலே - சின்னப்பாலகா
கட்டவிழ்க்கச்
சொல்லலையா - சின்னப்பாலகா
96
வந்தானே லாசருவும் -
சின்னப்பாலகா
வழக்கம்போல முகத்தைவச்சு
- சின்னப்பாலகா
97
தந்தானே தோத்திரந்தான்
- சின்னப்பாலகா
தருமமான உன்செய்கைக்குச்
- சின்னப்பாலகா
98
கல்புரட்டின ஆளுகளும் -
சின்னப்பாலகா
கட்டவிழ்த்த ஆளுகளும்
- சின்னப்பாலகா
99
அந்தநாள் அதிசயத்தைச்
- சின்னப்பாலகா
எந்தநாளும் பார்க்கலையாம்
- சின்னப்பாலகா.
100
கொஞ்சக்காலம் என்றாலும்
- சின்னப்பாலகா
குறையலைஉன் அற்புதங்கள்
- சின்னப்பாலகா.
101
மனிசனாநீ பிறந்திருந்தும்
- சின்னப்பாலகா
மறையலைஉன் அற்புதங்கள்
- சின்னப்பாலகா.
102
ராசாவாப் பிறந்திருந்தும்
- சின்னப்பாலகா
ராசாவுக்கு நீஅடங்கிச் - சின்னப்பாலகா
103
|