பக்கம் எண் :

New Page 1

332

மலையருவி

ரோசம்ஒன்றும் பாராட்டாமே - சின்னப்பாலகா
        தேசவரி கொடுக்கலையோ - சின்னப்பாலகா.

104

ராசாயோக்கி யத்தைநீ - சின்னப்பாலகா
        லேசாஒரு தரம்மாத்திரம் - சின்னப்பாலகா.
          

105

காட்டக் கழுதைமேல்ஏறிச் - சின்னப்பாலகா
        வாட்டமாநீ போகலையோ - சின்னப்பாலகா. 
         

106

உலகராச்சி யத்தைப்பற்றிச் - சின்னப்பாலகா
        உசத்திஒன்றும் பேசாமேநீ - சின்னப்பாலகா  
     

107

வானராச்சி யத்தைப்பற்றிச் - சின்னப்பாலகா
        வர்ணிச்சுநீ பேசலையோ - சின்னப்பாலகா.

108

_________