|
ஆஸ
ஆஸ்பத்திரி கட்டி
னானாம்
இந்த வெள்ளைக் காரன்.
32
தற்குறி கீற லெல்லாம்
இந்த வெள்ளைக் காரன்
தானே மாற்றி விட்டா னையா
இந்த வெள்ளைக் காரன்.
33
உச்சிக் குடிமி யெல்லாம்
போச்சு
இந்த வெள்ளைக் காரன்
வச்ச நல்ல கிராப்பு
மாச்சு
இந்த வெள்ளைக் காரன்.
34
நீரா காரத் தண்ணி
போச்சு
இந்த வெள்ளைக் காரன்
சாதாரணக் காபி யாச்சு
இந்த வெள்ளைக்காரன்.
35
ஒட்டுக்கோ வணமும்
போச்சு
இந்த வெள்ளைக் காரன்
சட்டைதுணி மணியு மாச்சு
இந்த வெள்ளைக் காரன்.
36
நாதி யற்ற பிள்ளைகளை
இந்த வெள்ளைக் காரன்
ஆத ரிச்சு வாறானையா
இந்த வெள்ளைக் காரன்.
37
இத்தனைநாள் படுத்த பாயி
இந்த வெள்ளைக் காரன்
மெத்தைங் கிடங் குடுத்திடிச்சு
இந்த வெள்ளைக் காரன்.
38
கண்ணுக் கெட்டுப் போயிட்டாலும்
இந்த வெள்ளைக் காரன்
கண்கொடுத்து வாறா னையா
இந்த வெள்ளைக் காரன்.
39
வெள்ளெழுத்து மாறிருச்சே
இந்த வெள்ளைக் காரன்
நல்லெழுத்து வந்தி ருச்சே
இந்த வெள்ளைக் காரன்.
40
|