பக்கம் எண் :

அகழ

பல கதம்பம்

343

அகழி வெட்டி அடக்கினானாம்
        இந்த வெள்ளைக் காரன். 
                    

23

கட்டை வண்டிக் குப்பதிலா
        இந்த வெள்ளைக் காரன்
    காருவிநோ தமுமென்ன
        இந்த வெள்ளைக் காரன்.
            

24

ரெட்டை மாட்டுக் குப்பதிலா
        இந்த வெள்ளைக் காரன்
    ரெயிலுவிநோ தமுமென்ன
        இந்த வெள்ளைக் காரன்.
           

25

சட்கா வண்டிக் குப்பதிலா
        இந்த வெள்ளைக் காரன்.
    சைக்கிள் விநோ தமுமென்ன
        இந்த வெள்ளைக் காரன்.
             

26

நாட்டு வண்டிக் குப்பதிலா
        இந்த வெள்ளைக் காரன்
    மோட்டாரு விநோத மென்ன
        இந்த வெள்ளைக் காரன்.
            

27

நிண்ணு நிண்ணு போறதுக்கு
        இந்த வெள்ளைக் காரன்
    சின்ன டிராம் வண்டியென்ன
        இந்த வெள்ளைக் காரன்

28

அர்ச்சுனன்கா லம்பறந்த
        இந்த வெள்ளைக் காரன்
    ஆகாசக் கப்ப லென்ன
        இந்த வெள்ளைக் காரன்

29

விளக்கெண்ணெய் விளக்குக்குப் பதிலா
        இந்த வெள்ளைக் காரன்
    எலக்ட்ரிக் விளக்கு மென்ன
        இந்த வெள்ளைக் காரன்
           

30

தண்ணி சொட்டும் நிற்காமலே
        இந்த வெள்ளைக் காரன்
    தார் ரோட்டுப் போட்ட தென்ன
        இந்த வெள்ளைக் காரன்!
         

31

அகஸ்மாத்தா ஆள்சாகாமே
        இந்த வெள்ளைக் காரன்