தங
தங்கரத்தினமே!
தினைக்கொல்லையில்
காடுவெட்டிக் கல்பொறுக்கிக்
கம்புசோளம் தினைவிதைத்துக்
காலைமாலை காட்டைக்காக்கத்
- தங்கரத்தினமே
கண்விழித் திருந்தாங்களாம்
- பொன்னுரத்தினமே.
1
அள்ளிஅள்ளி விதைத்த
அழகுத்தினை சாகாதடி
மொள்ளமொள்ள விதைத்த- தங்கரத்தினமே
மொந்தத்தினை சாகாதடி
- பொன்னுரத்தினமே.
2
கறுப்பானை ஓடிவரக்
கள்ளரெல்லாம் தினைவிதைக்க
வெள்ளானை ஓடிவரத் - தங்கரத்தினமே
வேடரெல்லாம் தினைவிதைக்கப்
- பொன்னுரத்தினமே.
3
சின்னச்சின்ன வெற்றிலையாம்
சேட்டுக்கடை மிட்டாயாம்
மார்க்கட்டு மல்லிகைப்பூ
- தங்கரத்தினமே
(உன்) கொண்டையிலே
மணக்குதடி - பொன்னுரத்தினமே.
4
சாலையிலே ரெண்டுமரம்
சர்க்காரு வச்சமரம்
ஓங்கி வளர்ந்தமரம் -
தங்கரத்தினமே
உனக்கேத்த தூக்குமரம்
- பொன்னுரத்தினமே.
5
________________________________________________
பாடபேதம் :
மார்க்கட்டு மருக்கொழுந்தாம்.
5. சாலையிலே
நெல்லிமரம்.
|