எல
எல்லோரும் கட்டும்வேட்டி
ஏழைக்கேற்ற மல்லுவேட்டி
சந்தனங் கட்டும்வேட்டி -
தங்கரத்தினமே
சரியான சரிகைவேட்டி
- பொன்னுரத்தினமே.
6
ஒத்தத்தலை நாகன்வந்து
ஒட்டக்காட்டை அழிச்சிடுத்தே
ஆராரைக் காவல்வைப்போம்
- தங்கரத்தினமே
அழகான தினைப்பயிர்க்குப்
- பொன்னுரத்தினமே.
7
தெய்வானையைக் காவல்வைத்தால்
தீஞ்சிடுமே தினைப்பயிரு
வள்ளியைக் காவல்வைத்தால்
- தங்கரத்தினமே
வனத்துக்கொரு சேதமில்லை
- பொன்னுரத்தினமே.
8
மூத்தண்ணன் பொண்சாதியை
மூணுமாசம் காவல்வைப்போம்
ஏழையண்ணன் பொண்சாதியை
- தங்கரத்தினமே
ஏழுமாசம் காவல்வைப்போம்
- பொன்னுரத்தினமே.
9
சாய்ந்திருந்து கிளிவிரட்டச்
சாய்மானமும்
பொன்னாலே
உட்கார்ந்து கிளிவிரட்டத்
- தங்கரத்தினமே
முக்காலியும்
பொன்னாலே - பொன்னுரத்தினமே.
10
வட்டவட்டப் பாறைதேடிக்
கொட்டினாளா மடிக்கதிரை
மோதிரக் காலினாலே -
தங்கரத்தினமே
மொரமொரண்ணு மிதித்தாள்வள்ளி
- பொன்னுரத்தினமே.
11
|