ப
பில்லிலே . . . . . .
. . . . . . . . . . . . .
. . . . . . . . . . . . . . . . . . .
.
கல்லுலே உரலுசெஞ்சு - தங்கரத்தினமே
கடமான்கொம் புலக்கைசெஞ்சு
- பொன்னுரத்தினமே.
12
கொச்சிமலைத் தேனெடுத்துக்
கூசாமே மாப்பிசைந்து
வாழைஇலை முறமுஞ்செஞ்சு -
தங்கரத்தினமே
வாருறாளாம் தினைமாவைத்தான்
- பொன்னுரத்தினமே.
13
மூத்தண்ணன் பொண்சாதிக்கு
மூணு பிடிகொடுத்தாள்
ஏழையண்ணன் பொண்சாதிக்குத்
- தங்கரத்தினமே
ஏழுபிடி தான்கொடுத்தாள்
- பொன்னுரத்தினமே.
14
நடுஅண்ணன் பொண்சாதிக்கு
நாலுபிடி தான்கொடுத்தாள்
தனக்கும்தன் தாயாருக்கும்
- தங்கரத்தினமே
தகுந்தபடி தான்எடுத்தாள்
- பொன்னுரத்தினமே.
15
பண்டாரத்துக்
கொருபிடியும்
பச்சைமாத் தேனும்கொடுக்க
தின்னத்தின்ன இனிக்குதென்றான்
- தங்கரத்தினமே
இன்னமுண்டோ தினைமாவென்றான்
- பொன்னுரத்தினமே.
16
பல கதம்பம்
ஆத்திலே போகுந்தண்ணி
அட்டைசெத்தை மிதக்குந்தண்ணி
நீகுடிக்கும் நல்லதண்ணியைத்
- தங்கரத்தினமே
நான்குடித்தால் ஆகாதோடி
- பொன்னுரத்தினமே.
1
|