வ
வாழைப்பூ வாழைப்பூ
வாழாத பொண்களுக்கு
மையேது பொட்டேது - தங்கரத்தினமே
மஞ்சள் குளிப்பேதடி
- பொன்னுரத்தினமே.
2
கோடாலிக் கொண்டைபோட்டுத்
- தங்கரத்தினமே
கோயிலுக்குப் போறபெண்ணே
- பொன்னுரத்தினமே.
ஆட்டாதே அந்தக்கொண்டையைத்
- தங்கரத்தினமே
அண்ணன்மார்
பார்ப்பாங்க - பொன்னுரத்தினமே
3
ஆல மரத்துக்கீழே - தங்கரத்தினமே
அசந்துநீ தூங்கையிலே
- பொன்னுரத்தினமே
முந்தாணித் துணியெடுத்துத்
- தங்கரத்தினமே
முகந்துடைத்த நாளும்போச்சு
- பொன்னுரத்தினமே
4
*
*
*
ஆத்துக்கு அந்தப்பக்கம்
- தங்கரத்தினமே
ஆயிரம் பூவிருக்கு -
பொன்னுரத்தினமே.
5
பின்னலு மோதிரமே - தங்கரத்தினமே
உன்னைவிட்டுப் பிரியமாட்டேன்
- பொன்னுரத்தினமே
. . . . . . .
. . . . . . . . . . . . . . .
6
படுத்தால் பலநினைவு - தங்கமாமாவே
பாயெல்லம் கண்ணீரு
- பொன்னுமாமாவே
உண்டால் உறக்கமில்லை -
தங்கமாமாவே
உறங்கினாலும் தூக்கமில்லை
- பொன்னுமாமாவே.
7
ஜாதிக்காய் மலைமேலே -
தங்கரத்தினமே
ஜாதிப்புறா மேயுதடி -
பொன்னுரத்தினமே
கூப்பிட்டுத் தீனிபோடு -
தங்கரத்தினமே
குந்திக்குந்தி
ஓடிவரும் - பொன்னுரத்தினமே
8
|