பக்கம் எண் :

New Page 1

தங்கரத்தினமே!

39

சோலைக் கிளிபிடித்துத் - தங்கரத்தினமே
        சொல்லிச்சொல்லி நான்வளர்த்தேன் - பொன்னுரத்தினமே
    சோலைக் கிளிவந்துதான் - தங்கரத்தினமே
        சொல்லாமல் ஓடிப்போச்சு - பொன்னுரத்தினமே.
      

9

ஓடுகிற தண்ணியிலே - தங்கரத்தினமே
        உரசிவிட்டேன் - சந்தனத்தைப் - பொன்னுரத்தினமே
    சந்தனத்தை நம்பியல்லோ - தங்கரத்தினமே
        வெண்பிறப் பானேனடி - பொன்னுரத்தினமே.   
      

10

காட்டுக் கிளிபிடித்துத் - தங்கரத்தினமே
        கையிலே நான்வளர்த்தேன் - பொன்னுரத்தினமே
    காட்டுக் கிளியினாலே - தங்கரத்தினமே
        காணாமே ஓடிப்போனேன் - பொன்னுரத்தினமே. 
    

11

ஓட்டைக் கரண்டகமாம் - தங்கரத்தினமே
        ஓசையிடும் வெண்கலமாம் - பொன்னுரத்தினமே
    வெண்கலத்தை நம்பியல்லோ - தங்கரத்தினமே
        விதிமோசம் போனேனடி - பொன்னுரத்தினமே.
     

12

எங்கள் துரைவருவார் - தங்கரத்தினமே
        எனக்குச்சம் பளந்தருவார் - பொன்னுரத்தினமே
    கிளிக்கூண்டு மேலேஏறித் - தங்கரத்தினமே
        கின்னாரம் வாசிப்பாரு - பொன்னுரத்தினமே.  
       

13

வண்டியிருக்கு மாடிருக்கு - தங்கரத்தினமே
        வயற்காடு உழுதிருக்கு - பொன்னுரத்தினமே
    எருமைத் தயிரிருக்கு - தங்கரத்தினமே
        ஏண்டிபோறே ரங்கோனுக்குப் - பொன்னுரத்தினமே.
     

14