ப
பழையசம்பா நெல்லிருக்கப்
- பொன்னுரத்தினமே
ஏழெருமைத் தயிரிருக்கத்
- தங்கரத்தினமே
ஏண்டிபோறே ஏர்க்காட்டுக்குப்
- பொன்னுரத்தினமே
ஏண்டிபோறே ஏர்க்காட்டுக்குப் - பொன்னுரத்தினமே
15
கங்காணி பொண்டாட்டி -
தங்கரத்தினமே
காசுக்காரி யிண்ணியிருந்தேன்
- பொன்னுரத்தினமே
பச்சைமலைத் தொங்கலிலே
- தங்கரத்தினமே
மொச்சைக்கொட்டை
விற்கிறாளே - பொன்னுரத்தினமே
16
வங்காளம் சிங்கப்பூரு -
தங்கரத்தினமே
வருகுதடி சீமைக்கப்பல்
- பொன்னுரத்தினமே
சீமைக்கப்பல் மேலேஏறித்
- தங்கரத்தினமே
சீமைபார்க்கப்
போறேன்இப்போ - பொன்னுரத்தினமே
17
கள்ளுக்கடை ஓரத்திலே -
தங்கரத்தினமே
கறிக்கடை நமதுகடை -
பொன்னுரத்தினமே
கறிவாங்க வந்தபிள்ளை -
தங்கரத்தினமே
கறுத்தபிள்ளை நம்மபிள்ளை
- பொன்னுரத்தினமே.
18
ஜாடையிலே பார்க்கிறதும்
- தங்கரத்தினமே
சைஸ்நடை நடக்கிறதும்
- பொன்னுரத்தினமே.
ஓடையிலே பார்க்கிறதும்
- தங்கரத்தினமே
உனக்கேற்ற வேலைதானே
- பொன்னுரத்தினமே.
19
பூமணக்குது கொண்டையிலே -
தங்கரத்தினமே
பூவைவச்சு
முடிஞ்சுக்கோடி - பொன்னுரத்தினமே
_____________________________________________________
19. சைஸ் -
Size.
|