பக்கம் எண் :

சந

தங்கரத்தினமே!

41

சந்தைக்குப் போயிண்ணாலும் - தங்கரத்தினமே
        பிள்ளைக்கு மோருவாங்கணும் - பொன்னுரத்தினமே 
     

20

நீல வளையல்போட்டுத் - தங்கரத்தினமே
        நிச்சயமா வாடிபெண்ணே - பொன்னுரத்தினமே
    நிற்கட்டுமா போகட்டுமா - தங்கரத்தினமே
        நிண்ணாஉன்னைப் பார்க்கலாமா - பொன்னுரத்தினமே
  

21

நிண்ணாலும் உன்பிரியம் - தங்கமாமாவே
        நிற்காட்டியும் உன்பிரியம் - பொன்னுமாமாவே
    மாமனோடே பேச்சைக்கேட்டுத் - தங்கமாமாவே
        மதிமோசம் போனேனே - பொன்னுமாமாவே. 
      

22

தண்ணிக்குப் போறையாடி - தங்கரத்தினமே
        தலைகுனிஞ்சு நடந்துவாடி - பொன்னுரத்தினமே
    லாரிக்காரப் பயலைக்கண்டால் - தங்கரத்தினமே
        தலையெடுத்துப் பார்க்காதேடி - பொன்னுரத்தினமே.      

23

வெள்ளைக்கல்லுக் கம்மல்போட்டுத் - தங்கரத்தினமே
        வேடிக்கையா வந்தபொண்ணே - பொன்னுரத்தினமே
    உன்னையாரு கொண்டுவந்தது - தங்கரத்தினமே
        உன்மேலே பிரியம்வச்சேன் - பொன்னுரத்தினமே
       

24

ஓடுற ஓட்டத்திலே - தங்கரத்தினமே
        ஓலைப்பெட்டி கக்கத்திலே - பொன்னுரத்தினமே
    கையைஊணிக் கரணம்போடும் - தங்கரத்தினமே
        காமாட்சி டொம்பப்பிள்ளை - பொன்னுரத்தினமே       

25