த
தலைசீவுகிற தாதிப் பொண்ணுக்குத்
தாவணி கொடுத்தவளே
- ராசாத்தி
தாவணி கொடுத்தவளே.
5
தண்டை போட்ட தாதிப்
பொண்ணுக்குத்
தண்டட்டி கொடுத்தவளே
- ராசாத்தி
தண்டட்டி கொடுத்தவளே.
6
மேலுத் தேய்க்கிற தாதிப்
பொண்ணுக்கு
மேலடு கொடுத்தவளே -
ராசாத்தி
மேலடு கொடுத்தவளே.
7
காலு கழுவற தாதிப் பொண்ணுக்குக்
காப்புக் கொடுத்தவளே
- ராசாத்தி
காப்புக் கொடுத்தவளே.
8
பூவு முடிக்கிற தாதிப் பொண்ணுக்குப்
பூமி கொடுத்தவளே -
ராசாத்தி
பூமி கொடுத்தவளே.
9
பொட்டு வைக்கிற தாதிப்
பொண்ணுக்குப்
பட்டுக் கொடுத்தவளே
- ராசாத்தி
பட்டுக் கொடுத்தவளே.
10
மையி வைக்கிற தாதிப்
பொண்ணுக்கு
மாடு கொடுத்தவளே -
ராசாத்தி
மாடு கொடுத்தவளே.
11
அஞ்சன மைக்காரத் தாதிப்
பொண்ணுக்கு
ஆடு கொடுத்தவளே -
ராசாத்தி
ஆடு கொடுத்தவளே.
12
முழங்காலுத் தண்ணி யிலே
முங்கிக் குளித்தவளே
- ராசாத்தி
முங்கிக் குளித்தவளே.
13
_______________________________________________
7. மேலடு -
மேலாடை.
|