பக்கம் எண் :

மந

ராசாத்தி

49

மந்திரம் தந்திரக் காரியெல் லாரையும்
        மானங் கெடுத்தவளே - ராசாத்தி
        மானங் கெடுத்தவளே.

14

மாற்றாந் தாயி மாரெல் லாரையும்
        மானங் கெடுத்தவளே - ராசாத்தி
        மானங் கெடுத்தவளே.
        

15

வம்புக் காரப் பயல்கள் மேலே
        வர்மம் வச்சவளே - ராசாத்தி
        வர்மம் வச்சவளே.  
                        

16

கேள்வி

கூடு விட்டுக் கூடு பாய்கிற
        கூட்டாளிப் பொண்ணே - ராசாத்தி
        கூட்டாளிப் பொண்ணே 
                  

1

கூட்டாஞ் சோறு ஆக்க லையா
        கூட்டாளிப் பொண்ணே - ராசாத்தி
        கூட்டாளிப் பொண்ணே.
           

2

அங்கிட்டும் இங்கிட்டும் கல்லுப்பொறுக்கி
        அடுப்புக் கூட்டலையா - ராசாத்தி
        அடுப்புக் கூட்டலையா?
                

3

கொத்து மல்லி இலையைப் பிடுங்கிக்
        குழம்பு வைக்கலையா - ராசாத்தி
        குழம்பு வைக்கலையா?
         

4

அம்மியி லேமஞ்சள் மிளகாய் அரைத்து
        அலுத்துப் போகலையா - ராசாத்தி
        அலுத்துப் போகலையா?
      

5

சட்டிபா னையிலே சமையல் செய்து
        சலித்துளப் போகலையா - ராசாத்தி

        சலித்துளப் போகலையா?

6