பக்கம் எண் :

50

மலையருவி

வாழை இலையும் ஆலம் இலையும்
        வாங்கப் போகலையா - ராசாத்தி
        வாங்கப் போகலையா?

7

கண் டாங்கிச் சீலை வாங்கக்
        கடைக்குப் போகலையா - ராசாத்தி
        கடைக்குப் போகலையா?
        

8

வெள்ளிச் சரிகையும் தங்கச் சரிகையும்
        விலைக்கு வாங்கலையா - ராசாத்தி
        விலைக்கு வாங்கலையா?
        

9

காசிப் பட்டும் லேஞ்சுப் பட்டும்
        கடையில் விக்கலையா - ராசாத்தி
        கடையில் விக்கலையா?
   

10

மூக்குத்தி ஒட்டி யாணம் முருகு
        மூணும் விக்கலையா - ராசாத்தி
        மூணும் விக்கலையா? 
                   

11

காதுக் கொரு கம்மல் வாங்கக்
        கடைக்குப் போகலையா - ராசாத்தி
        கடைக்குப் போகலையா?
       

12

சால்வை ஒண்ணும் சரப்பளி ரெண்டும்
        சரியா வாங்கலையா - ராசாத்தி
        சரியா வாங்கலையா?

13

ரத்தினக் கல்லு எல்லாம் பதிச்ச
        ரவிக்கை வாங்கலையா - ராசாத்தி
        ரவிக்கை வாங்கலையா?

14

மண்டையி லேவைக்கக் கொண்டைத்திருகொண்ணை
        மறந்து வந்தையாம்மா - ராசாத்தி

        மறந்து வந்தையாம்மா?
                                                       

15