ரம
ரம்பம் போலே கொம்பு
எல்லாம்
ஜம்பமா நிற்குதுபார்
- ராசாத்தி
ஜம்பமா நிற்குதுபார்.
5
கொம்பைச் சுற்றிக்
கொம்பும் பட்டும்
ஜொலிக்குது அங்கேபார்
- ராசாத்தி
ஜொலிக்குது அங்கேபார்.
6
சாடை கண்டு காளை எல்லாம்
ஓடப் பார்க்குதுபார்
- ராசாத்தி
ஓடப் பார்க்குதுபார்.
7
காளைக்குப் பின்னே ஆளுகள்
எல்லாம்
சாடு றாங்கநீபார் -
ராசாத்தி
சாடு றாங்கநீபார்.
8
நிண்ணு குத்திக் காளை எல்லாம்
நிமிர்ந்து நிற்குதுபார்
- ராசாத்தி
நிமிர்ந்து நிற்குதுபார்.
9
கறுத்த காளையும் செவத்த
காளையும்
கலந்து நிற்குதுபார்
- ராசாத்தி
கலந்து நிற்குதுபார்.
10
வெள்ளைக் காளையும் மயிலைக்
காளையும்
வெருண்டு நிற்குதுபார்
- ராசாத்தி
வெருண்டு நிற்குதுபார்.
11
வாலுப் பக்கம் வளைஞ்சு
வளைஞ்சு
வர்றாங்க வாலிவரு -
ராசாத்தி
வர்றாங்க வாலிவரு.
12
ஆத்திரம் புடிச்சு அப்பரா
ணியைத்தான்
அலாக்காய்த் தூக்குதுபார்
- ராசாத்தி
அலாக்காய்த் தூக்குதுபார்.
13
________________________________________________
12.
வாலிவரு - வாலிபர்.
|