பக்கம் எண் :

New Page 1

ராசாத்தி

53

கோட்டை யைச்சுத்திக் கல்பொ றுக்கிப்
        கோபுரங் கட்டினவளே - ராசாத்தி
        கோபுரங் கட்டினவளே. 
                   

19

பட்டுப் புடவை கட்டிக் கிட்டுத்
        தண்ணிக்குப் போனவளே - ராசாத்தி
        தண்ணிக்குப் போனவளே. 
                   

20

தங்கத் தாலே புடைவை கட்டிச்
        சண்டைக்குப் போனவளே - ராசாத்தி
        சண்டைக்குப் போனவளே.
      

21

பட்ட ணத்து வீதி யெல்லாம்
        சுத்தப் போனவளே - ராசாத்தி
        சுத்தப் போனவளே. 
                       

22

ஆடு வரும் மாடு வரும்
        கோடா கோடியே - ராசாத்தி
        கோடா கோடியே.
                      

23

சல்லிக்கட்டு

சல்லிக் கட்டும் மல்லுக் கட்டும்
        சண்டைக்குக் காரணமே - ராசாத்தி
        சண்டைக்குக் காரணமே.
                 

1

அரண் மனை வாசல் முன்னே
        ஆயிரம் காளைகளாம் - ராசாத்தி
        ஆயிரம் காளைகளாம்.

2

ஆள்ஒண் ணுக்குக் காளை ஒண்ணு
        அங்கே இருக்குதுபார் - ராசாத்தி
        அங்கே இருக்குதுபார்.

3

காளை எல்லாம் சாயம் பூசிக்
        கருத்தாய் நிற்குதுபார் - ராசாத்தி
        கருத்தாய் நிற்குதுபார்.
        

4